Saturday, August 9, 2008

எச்சரிக்கை : லக்கிலுக்கை நக்கல் செய்யும் போக்கை கைவிடுங்கள்

ஒரு அவசரப் பதிவு:-

சமீப காலமாக லக்கிலுக் அவர்களை குறிவைத்து எழும்பும் குரல்களில் இருக்கும் ஒருபக்க சார்பு அவரது வாசகர்களாகிய எங்களை ஒரு புறம் எரிச்சலடைய வைத்தாலும், இவற்றை எழுப்புபவர்களின் மையம் எங்களை சற்று சந்தேகக்கண்ணோடு தான் அவர்களை பார்க்கவைக்கிறது...தமிழ் வாசகர்களின் கேள்விகள் என்று பொதுமைப்படுத்தி எழுதிய கோவி.கண்ணனாகட்டும், யெஸ்.பாலபாரதி, அதிஷா ஆகிய பலரும் வெற்று பரபரப்புக்காக எதையாவது எழுதும் வெட்டி கோஷ்டி ஆகியவர்கள் எழுதிய வலைப்பதிவுகளாகட்டும், எங்களுக்கு ஒன்றை மட்டும் புரியவைத்தது.




ரொம்ப எரியாதீங்க மக்கள்ஸ் !!!! உங்களுக்கு பிடிக்கும்னா நீங்க ஆழ்வார்பேட்டை பக்கம் பார்த்து கும்பிடுங்க...இல்லைனா போயஸ் கார்டன் பக்கமோ, உடுப்பி கார்டன் பக்கமோ, வடபழனி , விருகம்பாக்கம் , தசரதபுரம் பக்கமோ கும்பிடுங்க ... நாங்க மடிப்பாக்கம் பக்கம் ஒதுங்கிக்கறோம் , எங்கள் அன்புக்குரிய லக்கிலுக் ஒரு ஃபீனிக்ஸ் !!! நாளைய பதிவுல மக்களை நாங்க சந்திக்கறோம்...அதுவரை இதுபற்றி நாங்க பேசறதா இல்ல !!!

யாரும் சீரியஸா எடுத்துக்காதீங்க பாஸு! இந்தப் பதிவைப் படிச்சுக்கங்க...!
(அவரும் செந்தழல் ரவி கிட்ட இருந்துதான் சுட்டாரென்பதை அறியவும்!)

லக்கியின் படம் சென்ஷியிடமிருந்து சுட்டது என்பதையும் அறியவும்!

மாற்றான் தோட்டத்து மல்லிகைகள்

சிலரது வலைப் பூ ப்ரொஃபைல்லிலிருந்து சுவையான சில தகவல்கள்: (அனுமதியில்லாம எடுத்துட்டேன். மன்னிச்சுக்கங்க. கேஸ் போட்டுடாதீங்க!!)


Syam: (இவரு ப்ரொஃபைல் ரொம்பவே இண்ட்ரஸ்டிங்! தமிங்கிலீஷ்ல அடிச்சு வெச்சிருக்காரு. நான் உங்களுக்காக தமிழ்ல தர்றேன்!, ப்ராக்கெட்ல இருக்கறது என் கமெண்ட்!!)

வயசு: 676 (மாசத்துல சொல்லிருப்பாரோ?)

தொழில்: மாடு/கழுதை மேய்க்கறது (உண்மையோ என்னமோ, யாரு கண்டா?)

அவரைப் பற்றி: நல்லவன், வல்லவன், னாலும் தெரிஞ்சவன் – அப்படீன்னு சொன்னா நம்பவா போறீங்க? (ம்க்கும்.. நம்பீட்டாலும்!)

INTERESTS: குஷ்பூல ஆரம்பிச்சு நயந்தாரா வரைக்கும் இண்ட்ரஸ்டோ இண்ட்ரஸ்ட்தான்! (அதானே பார்த்தேன்!!)

ஃபேவரைட் மியூசிக்: ஹிந்துஸ்தானி, கஜல் – அப்படின்னு சொல்ல ஆசை. ஆனா அதெல்லாம் எனக்குப் புரியாதே..

ஃபேவரைட் புக்ஸ்: ராங் கொஸ்டீன்!

(இவ்ளோ நக்கல் திலகம் எழுதறதுக்கு லீவு விட்டது நாம செஞ்ச பாவம்!!)

சரவணகுமரன்:-

அவரைப் பற்றி: ஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன்.

விஜய் ஆனந்த்:-

Occupation: பொட்டி தட்டி

தமிழன்:-

அவரைப் பற்றி:: வேற்று கிரகத்தின் இளவரசன்... ஒரு பெண்மையிடம் தோற்றவன்... வாழ்வதற்காய் பூமிக்கு வந்தவன்...

Interests: வாழ்தல்!

தமிழ் பிரியன்:-

அவரைப் பற்றி: கரிசல் காட்டுக்குச் சொந்தக்காரன். பாண்டிய மண்ணின் மைந்தன்.



அதிஷா:

அவரைப் பற்றி: சிறகு விரிக்க எத்தனிக்கும் சிறிய பறவை

Babu: (ரெங்கராஜ் பாபு) தன்னைப் பற்றி சொல்லும்போது 100% மிடில் க்ளாஸ் என்றிருக்கிறார்!

இவரோட ப்ளாக் பேரு: ஒண்ணுமே புரியல. (நல்லா எழுதறாரு. தமிழ்மணத்துல இன்னும் இணைக்கலைன்னு நினைக்கறேன்!)

கிரி:- (நம்ம ரஜினிகிரி தான்)
லொகேஷன்: இப்போது சிங்கப்பூர், எப்போதும் தமிழ்நாடு
ப்ளாக் பேரு: மனசாட்சி!

VIKNESWARAN:

அவரைப் பற்றி: சொல்ல மாட்டேன் (இப்படித்தாங்க எழுதியிருக்காரு!)

லதானந்த்: (நம்ம அங்கிள்!)

அவரைப் பற்றி:
காட்டிலாக்கா அதிகாரி. வாழ்க்கையை ரசனையோடு கழிக்க விரும்புகிறேன்.
வாழ்வின் அனைத்து இன்பங்களையும் துய்த்து விட்டேனா? (இன்னும் இல்லையா? அடப் போங்க அங்கிள்...)

பிடித்த படங்கள்: சினிமா பிடிக்காது, சினிமாக்காரங்களைப் பிடிக்கும்! (அதானே!!)

(ஃபேவரைட் புக்ஸ்ல சரோஜாதேவி-யும் இருக்கு!!)

புதுகை எம்.எம்.அப்துல்லா:

அவரைப் பற்றி: நம்ப blog படிக்க நீங்க வந்ததே பெருசு!!! இதுல நம்பள பத்தி வேற நீங்க படிக்கனுமா? இன்னா கொடுமை சார் இது? (நல்லாச் சொன்னேள் போங்கோ!)

முத்துலெட்சுமி கயல்விழி:

இவங்க வசிக்கறது: டில்லி, புதுடில்லி (அதெப்படீங்க ரெண்டு எடத்துல?)

வெண்பூ: (பார்ட்னர்)
லொகேஷன்: தருமமிகு (நாற்றமிகுன்னு வெச்சிருக்கலாம்) சென்னை
ஃபேவரைட் மியூசிக்: நம்ம ராசா எசன்னா சோறுதண்ணிகூட வேண்டாம். (இதுதான் இவரை எனக்கு நெருக்கமாக்கின மேட்டர்!)

சென்ஷி: யாயும் யாயும் யாராகியரோ..! ஸ்நேகமுடன் நட்பை நாடும் வலை பயணம்

சின்ன அம்மணி:

ஃபேவரைட் மியூசிக்: எத்தனி இருக்கு. எதச் சொல்றது, எத விடறது!


விஜய்:
தனது ஊரான பெங்களூரை `பெண்களூர்’ என்றிருக்கிறார்!
இண்ட்ரஸ்ட்: ஃபிகருங்களுக்கு நூல் வுடறது

நனானி:

அவரைப் பற்றி: 'pretty to walk with- witty to talk with - என் தலைமையாசிரியர் சொன்னது.

நந்து f/o நிலா:-

அவரைப் பற்றி: நிலாவோட அப்பா. இத தவிர உருப்படியா சொல்லிக்க எதுவும் இல்ல. (இத நான் சொல்லலீங்க. அவரே சொல்லீருக்காரு!)

கைப்புள்ள:

அவரைப்பற்றி: மோகன் ராஜ். சில நேரங்களில் 'உதார்' விடும் கைப்புள்ள, சில நேரங்களில் எடுப்பார் கைப்புள்ள.எல்லா நேரங்களிலும் எல்லோருக்கும் எல்லாமுமாக இருக்க வேண்டும் என்ற நடக்கவே இயலாதக் குறிக்கோளைக் கொண்டுள்ள கனவுலகக் குழப்பவாதி.

நாமக்கல் சிபி:

அவரைப்பற்றி: கலாய்க்கிறது எனக்குப் பிடிக்கும். ஆனா கலாய்க்கிறது நானா இருக்கணும்!

கடைசியா ஒரு சூப்பர் மேட்டர்:-

வெயிலான்:

தனக்குப் பிடித்தவைகளைப் பற்றிக் கூறுகையில்..

அன்பும் சிறு ஆசையும்
பண்பும் சிறு பழகலும்
பூக்களும் சிறு புகழும்
படித்தலும் சிறு நடத்தலும்
ரசித்தலும் சிறு புசித்தலும்
குணமும் சிறு பணமும்
பயணமும் சிறு சயனமும்
கறுப்பும் சிறு மறுப்பும்
நட்பும் நல் நண்பர்களும்
நல் மனமும் நம் இனமும் பிடிக்கும்.



இன்னும் நிறைய இருக்கு. இப்போதைக்கு இவ்வளவே.

டிஸ்கி: தலைப்பே ஒரு மாற்றான் தோட்டத்து மல்லிகைதான். தோட்டத்துக்கு சொந்தக்காரர் அறிஞர் அண்ணா!

(ஸாரி.. எல்லோருக்கும் சுட்டி குடுக்காததுக்கு!)

.

Friday, August 8, 2008

அவியல் – 08.08.08


ஒரு வாரமாக மீராவும்(10 வயது - ஆறாவது படிக்கிறாள்) மேகாவும் (7 வயது – மூன்றாவது படிக்கிறாள்) கம்ப்யூட்டரில் அமர்ந்து பெய்ண்ட்டில் என்னென்னமோ வரைந்து தள்ளுகிறார்கள். (ஒரு சில பிரமிப்பாகவும் இருக்கிறது!) `இதை உங்க ப்ளாக்ல போடுங்க' என்று கட்டளை வேறு..

இது மேகா வரைந்தது.




இது மீரா..





----------------

நண்பர் புதுகை.எம்.என்.அப்துல்லாவிற்கு விபத்து என்றறிந்து துடித்துப் போனேன்! ஆனால் ஒரு மெயில் அனுப்பியோ, அவரது பின்னூட்டத்தில் போய் விசாரிக்கவோ இல்லை! இது குறித்து அவரே ஒரு பதிவும் போட்டு “ஏன் பரிசல் என்னை மறந்துட்டீங்க?” என்று கேட்டேவிட்டார். அதற்கு விளக்கமாக ஒரு பின்னூட்டம் போட்டேன். ஏனோ, அதை மட்டுறுத்திவிட்டார்!


இதோ அந்தப் பின்னூட்டம்:


அன்புள்ள அப்துல்லா..


மன்னியுங்கள்.


தமிழ் பிரியனின் பதிவில் படித்து `என்னாச்சு’ என்று பதறியது உண்மை! ஒரு மெய்ல் போட்டு கேக்கலாம் என்று நினைத்து அப்படியே விட்டுவிட்டேன்! அதையும் செய்யவில்லை! இந்த மாதிரி விஷயங்களில் என்னைவிடக் கேவலமான ஒருத்தரை நீங்கள் பார்க்கவே முடியாது! கிண்டலாகச் சொல்லவில்லை. நிஜம்!


சமீபத்தில் என் நண்பர் கனலிக்கு குழந்தை பிறந்ததை குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? அவர் முதன் முதலில் அழைத்துச் சொன்னது என்னிடம்தான். பிறகு நான் சில நணப்ர்களுக்கு அழைத்துச் சொன்னபோது அவர்கள் கேட்ட ‘சுகப்பிரசவமா?, குழந்தை என்ன எடை? அம்மா நலமா?’ போன்ற கேள்விகளுக்கு பெப்பே என்று முழித்தேன். `என்னடா, இதையெல்லாம் கேக்கணும்-ங்கற அடிப்படை கூடத் தெரியலயேடா உனக்கு என்று திட்டித் தீர்த்தார்கள்! அவ்வளவுதான் நான். என்னைப் பற்றி எந்த உயர்வான அபிப்பிராயங்களும் வேண்டாம்!


நீங்கள் என் மீது கொண்டுள்ள அன்பிற்கு... என்ன சொல்ல? `ச்சே, இப்படிப் பண்ணீட்டேனே, இனி அவன் முகத்துல எப்படி முழிக்கறது’ என்ற நிலையில்தான் நான் இருக்கிறேன்!



இதற்கு வேறு எந்தக் காரணமும் சொல்லி என்னை இன்னும் கேவலப்படுத்திக் கொள்ள விரும்பாததால், இந்த உண்மைகளைச் சொல்ல வேண்டியதாயிற்று. அதுதான் நான் உங்கள் நட்பிற்குக் கொடுக்கும் மரியாதையாக இருக்கும்!


கடைசியாக, நான் இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் குறிப்பிடவென்றே வைத்திருக்கும் ரமேஷ் வைத்யா-வின் ஒரு கவிதை..


சந்தோஷத்தை முகம்முழுக்கப்
பரத்திக் கொண்டு
கண்களில் ஒளிமின்ன-
முகமன் கூறாதீர் எனக்கு.


தூரத்தே நான் வரும்போதே
கைகள் உயர்த்தி
உற்சாகமாய் ஆர்ப்பரிக்காதீர்-
வரவேற்கும் விதமாய்.


தோளோடு அணைத்து
நா தழுதழுக்க
`எத்தனை காலமாச்சு பார்த்து’
என்று ஏங்காதீர்.


இவையெதுவும் இல்லாமலும்
ஒரு மனசு அறியாதா
தன்னைப் போல் இன்னொன்றை


என்றும் உங்கள் நட்பை நாடும்...
-கிருஷ்ணா


அதற்குப் பிறகு, இதை ஏன் வெளியிடவில்லை என்று தொலைபேசியில் அழைத்துக் கடிந்து கொண்டபோது, அவர் சொன்ன காரணம்தான் ஹைலைட்டாக இருந்தது.

“நீங்க உங்களைப் பத்தி எழுதியிருந்ததைப் படிச்சதும்தான் தெரிஞ்சது, நானும் அப்படித்தான்னு! என்னைப் பத்தி நானே எழுதினமாதிரி இருந்தது. அதான் போடல. நீங்களாவது உங்க நண்பரோட குழந்தையைப் பத்தி கேக்கலன்னு எழுதியிருக்கீங்க. நான் எனக்கு குழைந்தை பிறந்தப்பவே இதையெல்லாம் கேக்கல. அப்படீன்னா பாத்துக்கோங்க!” என்றார்.


அட! இவரு நம்மாளு என்று தோன்ற, பல முறை அவர் என் மொக்கையைத் தாங்கமுடியாமல் ஃபோனை ஆஃப் செய்தாலும், விடாமல் மிகவும் கம்மியாக ஒன்றரை மணிநேரம் பேசினேன்!

-------------------------

நேற்று ஜெயா டி.வி.யில் ஹாசினி பேசும் படத்தில் ‘குசேலன்’. பி.வாசுவைப் பார்த்து சுகாசினி சொன்ன ஒரு பாராட்டைக் கேட்டதும், சாப்பிட்டுக் கொண்டிருந்த நான் பாதியிலேயே எழுந்துவிட்டேன்.


“இதுவரைக்கும் நீங்க டைரக்ட் பண்ணினதுலயே ‘தி பெஸ்ட்’ இதுதான்” ன்னு சொல்லீட்டாங்க. கொடுமைடா சாமி!


எனக்கு தெரிஞ்சு `மன்னன்’தான் பி.வாசுவோட பெஸ்டோ பெஸ்ட்!


-------------------------------

இரண்டு நாள் முன் இரவு சாப்பிடும்போது `எல்லாம் அவன் செயல்’ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார் உமா. பிறகுதான் தெரிந்தது, இரவு சமையல் நேற்று முழுவதும் OVEN-ல் செய்தாராம்! எல்லாம் OVEN செயல்!
---------------------------------

நேற்று புத்தகக் கடைக்கு முன் வண்டியை நிறுத்தி, ”இரு `கடன்’ வாங்கீட்டு வரேன்” என்று சொல்லிவிட்டுப் போய் வி-கடன் வாங்கினேன். விகடனில் வரும் இணைப்பில், எப்படித்தான் இப்போதைய நிலவரத்துக்குத் தகுந்த மாதிரியேயான பழைய செய்திகளை எடுத்துப் போடுகிறார்கள் என்று பிரமிப்பாய் இருக்கிறது. போன வாரம் 12.05.1985ல் வெளியான மின்வெட்டு பற்றிய தலையங்கமும், இந்த வாரம் 11.1.1997ல் வெளியான வெடிகுண்டு பீதி பற்றிய தலையங்கமும் சூப்பர். அதுவும், இந்தவாரத் தலையங்கத்தில் மதன் கார்ட்டூன் கலக்கலாக இருந்தது.

விகடனின் வடிவம் பிடிக்கவில்லை என்றாலும், நம் மகள் மார்டன் ட்ரெஸ் போட்டால் பிடிக்காவிட்டாலும், அவ சுதந்திரம், சரி, விடு என்று ரசிக்கறோமில்லையா அப்படித்தான் ஆகிவிட்டது!

---------------------------------

நமீதாவை ஏன் ரொம்பப் பிடிக்கிறது என்று ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துவிட்டார்கள்! அசின், த்ரிஷா, ஸ்ரேயா, நயன்தாரா என்று சொல்லிப்பாருங்கள். உதடு ஒட்டாது. நமீதா என்று சொல்லிப் பாருங்கள். ஒட்டுதா? அதான்...


சரி.. யாராவது அடிக்கவருமுன் ஓடிவிடுகிறேன்.....